கோவையில் ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை

Spread the love

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில், உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுவது வழக்கமாகிவிட்டது. இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் அவை மனித வாழ்விடங்களுக்கு உலா வருகின்றன.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 6.30 மணியளவில், வெள்ளிமலைப்பட்டினம் பகுதியில் ஒரு காட்டு யானை வந்தது. அப்போது சாலையோரத்தில் இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதும், கோவிலுக்குப் பூ பறிக்கச் சென்றிருந்த 90 வயது முதியவரைத் தாக்கியது. இதனால் அவரது இரு கால்களும் முறிந்தன. அருகிலிருந்தவர்கள் கூச்சலிட்டதால், யானை உடனே வனப்பகுதியை நோக்கி திரும்பிச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பான தகவலை அறிந்த வனத்துறை அதிகாரிகள், அப்பகுதியில் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.