கோவை காட்டூர் பட்டேல் ரோடு, பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு இயந்திர உதிரிபாகக் கடையில் வெள்ளிக்கிழமை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. கடைக்குள் இருந்த ஆயில், பிளாஸ்டிக் உதிரிபாகங்கள், டயர்கள் உள்ளிட்ட பொருள்கள் வெடித்ததால் சில நிமிடங்களிலேயே தீ வேகமாகப் பரவியது.
உதிரிபாகக் கடைக்கு மிக அருகில் நெருங்கிய குடியிருப்புகள் அமைந்திருப்பதால், தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி அப்பகுதியில் பதட்ட நிலையை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. ஆனால் குறுகிய தெருக்கள் மற்றும் வேகமாகப் பரவிய தீயால், அணைப்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் சவால்களைச் சந்தித்தனர்.
பொதுமக்களும் தீயணைப்புத் துறையுடன் இணைந்து தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டனர். தீக்கான காரணம் மின் கசிவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Leave a Reply