, ,

கோவையில் ஆன்லைன் மோசடி- இரண்டு பேர் கைது

online-fraud
Spread the love

கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட் பகுதியில் கண்ணன் மற்றும் ராஜசேகர் என்ற சகோதரர்கள், வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி பலரை அதில் சேர்த்தனர். அவர்கள், கேரளா மாநில லாட்டரி குழுக்களை ஒத்த மாதிரியாக, கடைசி மூன்று எண்களுக்குப் பரிசு வழங்குவதாக குழுவில் அறிவித்தனர்.

இதன்வழியாக பலர் தினசரி பணத்தை இந்த இருவருக்கும் அனுப்பினர். பெரும்பாலானவர்களுக்கு பரிசு கிடைக்காமல், சிலருக்கு மட்டுமே பரிசுத்தொகை ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்படுவதாக தகவல் ரத்தினபுரி காவல் துறைக்கு கிடைத்தது.

ஆய்வாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையிலான போலீசார் கண்ணன் மற்றும் ராஜசேகரின் வீட்டில் சோதனை நடத்தியபோது, மோசடிக்காக தனி செல்போன்களை பயன்படுத்தியதும், பலரிடமிருந்து பணம் வசூலித்ததும் தெரியவந்தது.

பின்னர், காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். ஆன்லைன் மோசடியில் கிடைத்த பணத்தில் வாங்கிய 213 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன, அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சமாகும். மேலும், லாட்டரி மோசடிக்காக பயன்படுத்திய இரண்டு செல்போன்களும் கைப்பற்றப்பட்டன. கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.