கோவையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
கோவை லட்சுமி மில்ஸ் அருகே உள்ள அவிநாசி ரவி அலுவலகம், ராம் நகர் பிஎஸ்கே அலுவலகம் மற்றும் அவிநாசியில் உள்ள குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர் வேலுமணி அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் சுமார் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
சோதனை நடைபெறும் இவர்கள் 3 பேரும் தமிழக நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர்கள் என தெரியவந்துள்ளது. தமிழக அரசின் ஒப்பந்த பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply