கோவையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

Spread the love

கோவையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைவரும் நோன்பு இருந்து வருகின்றனர். நாள்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு இருந்து நோன்பு இருக்கும் அவர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இப்தார் நோன்பு திறந்து உணவருந்துகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெறுகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு விமர்சையாக நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை ஒப்பணக்காரர் வீதியில் உள்ள அத்தர் ஜமாத் பெரிய பள்ளிவாசலில் கோயம்புத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் அனுபவ ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அறங்காவலர் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நிகழ்வில் கௌரவ தலைவர் ரவீந்திரன், செயலாளர் உமர் சதாம், பொருளாளர் தமிழ்ச்செல்வன், மற்றும் ஜமாத் தலைவர் பீர்முகமது, செயலாளர் பக்கீர் முகமத், முத்தவல்லி ஜாபர் அலி, பொருளாளர் ஆஷிக் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.