கோவைக்கு மாஸ்டர் பிளான் 2; முதல்வருக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் நன்றி

Spread the love

 

கோவைக்கு மாஸ்டர் பிளான் கொண்டு வந்து, பிளானிங்கில் மாஸ்டராக திகழும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி,சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவையை அழைப்பார்கள். நூற்பாலைகள், சிறுகுரு தொழில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மென்பொருள் நிறுவனங்கள் என, அனைத்து தொழில்களும் கோவையில் செழித்து வளர்கிறது. இதனால், கோவை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி நகர வேண்டியுள்ளது. அதற்கு முத்தாய்ப்பான திட்டமாக, தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வகுத்துள்ள திட்டமே மாஸ்டர் பிளான் 2 . இத்திட்டத்தின் வாயிலாக, உலகத்தில் உள்ள முன்னணி நகரங்களுக்கு நிகரான நகரமாக கோவை வளரும். மாஸ்டர் பிளான் செயலாக்கத்தின் வாயிலாக, பல்வேறு துறைகள் அபரிவிதமான வளர்ச்சி அடையும். இதனால் கோவையில் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, அனைவரும் வேலை வாய்ப்பை பெறலாம். நவீன அறிவியல் உலகத்திற்கு ஏற்ற வகையில், 2041 ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் திட்டம் வகுத்திருப்பது, கோவையை இந்தியாவில் முன்மாதிரி நகரமாக மாற்றும் முயற்சி என்றே நாங்கள் நம்புகிறோம். நகர்ப்புறம், கிராமப்புறம் என பலதரப்பட்ட கட்டமைப்பை உள்ளடக்கிய கோயம்புத்தூருக்கு, சரியான நேரத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ்டர் பிளான் அறிவித்துள்ளார். பல்வேறு சிறந்த பிளான்களை வகுத்த, பிளான்களின் மாஸ்டர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மக்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்றே உணர்கிறோம்.மாஸ்டர் பிளான் 2, கோவை வளர்ச்சிக்கு ஒரு பெரும் மைல்கல்லாகவே பார்க்கின்றோம் வரலாறு பேசும் மாஸ்டர் பிளான் 2 வெளியிட்ட முதல்வருக்கு, பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.