கோவிலில் மேளம் உள்ளிட்ட வாத்தியங்களை இசைக்க கூடாது என அறநிலைய துறை அதிகாரி பிறப்பித்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற் பட்டதை அடுத்து, ஆட்சியர் தலையிட்டு, அந்த உத்தரவை ரத்து செய்தார்.
கோவை துடியலுாரை அடுத்த கே.வட மதுரையில்,விருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்இந்து சமய அறநிலையதுறை கட்டுப் பாட்டில் உள்ளது.கோவி லில் செயல் அலுவலராக ஷாலினி உள்ளார்.
இந்த கோவிலில் ஷாலினி பெயரில் கோவிலில் ஓர் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ‘மேளதாளங்கள், சிவவாத்தியம், உடுக்கை, தாரை தப்பட்டை, செண்டை மேளம், ஜமாப், சங்கு சேகன்டி ஆகியவற்றை கோவில் வளாகத்தில் இசைக்கக் கூடாது’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
காலம் காலமாக கோவிலில் இசைக்கப்பட்டு வந்த வாத்திய கருவிகளை இசைக்க தடை விதித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தடைக்கான காரணத்தையும் ஷாலினியோ மற்ற ஊழியர்களோ தெரிவிக்கவில்லை.
அறநிலைய துறையின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, கலெக்டர் பவன்குமாரிடம், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மனுவை பரிசீலித்த கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடத்தினார். மனுவில் கூறியுள்ள தகவல்கள் உண்மையே என்பதை கண்டறிந்தார். அவ்வாறு தடை விதிப்பதற்கு அறநிலைய துறையின் சட்ட விதிகளில் இடம் இல்லை என்பதையும் அறிந்தார்.
அதை தொடர்ந்து, விருந்தீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்ற கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார். அதன்படி, அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது.
கோவிலில் மேளம் வாசிக்க தடை உத்தரவை ரத்து செய்த கோவை ஆட்சியர்



Leave a Reply