,

கோடை கால தடகள பயிற்சி முகாமின் தடகள போட்டிகள்

Spread the love

கோவையில் 24-வது கோடை கால தடகள பயிற்சி முகாமின் தடகள போட்டிகள்; அம்ருத் ஆர்கானிக்ஸ் CEO K.ராஜேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

கோவை அத்லெடிக் கிளப் தனது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கோடை கால பயிற்சி முகாம்களில் கலந்து கொண்ட தடகள வீரர், வீராங்கனைகளுக்கு கடந்த 23 ஆண்டுகாலமாக தடகள போட்டிகளை நடத்தி வருகிறது. 24-வது கோடை கால தடகள பயிற்சி முகாமின் தடகள போட்டிகள் 14.6.2025 அன்று கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்ருத் ஆர்கானிக்ஸ் (AMRUDH ORGANICS PVT LTD) நிறுவன தலைமை செயல் அதிகாரி K.ராஜேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்வாண்டு நடைபெற்ற போட்டிகளில் 8 வயது முதல் 19 வயது வரையிலான 1200-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றன. ஜூன் 14, காலை துவங்கிய விளையாட்டுப் போட்டிகள் மாலை வரை நடைபெற்றது.

இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அம்ருத் ஆர்கானிக்ஸ் (AMRUDH ORGANICS PVT LTD) நிறுவன தலைமை செயல் அதிகாரி K.ராஜேஷ், CDAA துணைத் தலைவர் சரவண காந்தி, உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களையும் பரிசு பொருட்களையும் வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.