கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் கொல்லூர் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. தேவி மூகாம்பிகை இங்கு சக்தி தேவதையாக வழிபடப்படுகிறார்.கொல்லூர் மூகாம்பிகைக்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் உண்டு. குறிப்பாக, தமிழகத்தில் இரு பிரபலங்கள் கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தர்கள். ஒருவர் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அரிதாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக வெளி மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவார்.
அப்படி , அரிதாக சென்று ஜெயலலிதா வழிபட்ட கோவில்களில் கோவிலும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலும் ஒன்று. கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி தனது நெருங்கிய தோழி சசிகலாவுடன் தனி ஹெலிகாப்டரில் உடுப்பி சென்ற ஜெயலலிதா அங்கிருந்து காரில் தாய் மூகாம்பிகை கோவிலை சென்றடைந்தார். அங்கு, அம்மனை மனதுருக வழிபட்டு , மீண்டும் தமிழகம் திரும்பினார். ஜெயலலிதா, இந்த கோவிலுக்கு சென்று வந்த பிறகு, தமிழகத்தில் இருந்து விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றுவர தொடங்கினர்.
ஜெயலலிதா போலவே தமிழகத்தின் இன்னொரு பிரபலமும் கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தர். அவர் வேறுயாருமல்ல சாட்சாத் இளையராஜாதான். அனைத்து கடவுள்களையும் இளையராஜா வழிபட்டாலும், கொல்லூர் மூகாம்பிகை இளையராஜாவுக்க ரொம்பவே ஸ்பெஷல். இசையுலகில் தான் கோலோச்ச தாய் மூகாம்பிகையே காரணம் என்றும் நம்பிக்கை கொண்டவர். இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்த இளையராஜா அடுத்து நேரடியாக கடந்த புதன்கிழமை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத்தான் வந்தார்.
ஏற்கனவே பலமுறை இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். ஆனாலும்,இந்த முறை அவரின் விசிட் சற்று வித்தியாசமானது. இந்த முறை கிட்டத்தட்ட 8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் போன்றவற்றை மூகாம்பிகை கோவிலுக்கு காணிக்கையாக அவர் வழகினார்.
கொல்லூர் மூகாம்பிகா தேவிக்கும் வீரபத்ர சுவாமிக்கும் வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் காணிக்கையாக செலுத்தி வழிபட்டார் இளையராஜா. அவரது மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவும் அப்போது உடனிருந்தார். காணிக்கைகயை கோவில் தலைமை குரு சுப்ரமணிய அடிகா பெற்றுக் கொண்டார்
நகைகளைச் வழங்கும் முன், கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுடன் இளையராஜா ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அப்போது, பக்திப் பரவசத்தில் தன் வாழ்வில் அம்மையின் அருளால் நிகழ்ந்த அற்புதங்களை இளையராஜா நினைவு கூர்ந்தார். மூகாம்பிகை அம்மனால் தன் வாழ்வில் அசாதாரண முன்னேற்றங்கள் ஏற்பட்டது என்றும் பத்தியுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, இளையராஜாவுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பிரபல இசையமைப்பாளரிடமிருந்து கோவிலுக்கு இவ்வளவு பெரிய நன்கொடை கிடைத்தது மூகாம்பிகை பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் நகை சமர்ப்பணம் என்பது மட்டுமல்ல, ஒரு மகத்தான கலைஞன் தனது இஷ்ட தெய்வத்தின் மீது கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கை மற்றும் பக்திக்குச் சான்று என்றும் பக்தர்கள் கூறி வருகின்றனர்.



Leave a Reply