கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் உள்ள மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப. ராஜ்குமார் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி மற்றும் தொண்டாமுத்தூர், அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ப. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர் வே. சங்கீதா வரவேற்புரையாற்றினார். விழாவின் நிறைவில் துணை முதல்வர் முனைவர் எஸ். நாகராஜா நன்றியுரை வழங்கினார்.
மாணாக்கரின் கல்வித் தரத்தை வளப்படுத்தும் நோக்கிலும் திறன் மேம்பாட்டை வளர்த்து ஆய்வுகளுக்குத் துணை செய்யும் வகையிலும் மூன்றாமாண்டு படிக்கும் 1411 மாணவ, மாணவியர்களுக்குத் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப. ராஜ்குமார் வழங்கினார்.
கொங்குநாடு கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்



Leave a Reply