கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான டேக்வேண்டோ சேம்பியன்ஷிப்

Spread the love

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை, உலகக் குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பு, இந்தியக் குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பு மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பு இணைந்து ஒருங்கிணைத்த குழந்தைகளுக்கான முதலாமாண்டு மாநில அளவிலான டேக்வேண்டோ சேம்பியன்ஷிப் 2025 நிகழ்வு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.


உலகக் குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் இந்தியக் குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பின் தலைவர் சிவராம் மக்வானா இந்நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.

கொங்குநாடு டேக்வேண்டோ அமைப்பின் தொடக்க விழாவில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் மேஜர் முனைவர். பி.கே.கவிதா ஸ்ரீ வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர். வே. சங்கீதா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி. ஏ. வாசுகி தலைமையுரை ஆற்றினார்.
உலகக் குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் இந்தியக் குழந்தைகள் டேக்வேண்டோ அமைப்பின் தலைவர் சிவராம் மக்வானா சிறப்புரையாற்றினார்.
கோயம்புத்தூர் ஆர்.பி.எம் வித்யாலயா மற்றும் சிறுவாணி ஆர்.பி.எம் அறக்கட்டளையின் நிறுவனர் சி. பி. மணிவண்ணன் சிறப்புரை ஆற்றினார். விழாவின் நிறைவாக முனைவர். டி. குமார், சுயநிதிப்புல ஒருங்கிணைப்பாளர், வணிகவியல் மற்றும் கணினிப்பயன்பாட்டியல் துறையின் தலைவர் நன்றியுரை நிகழ்த்தினார்..


பல்வேறு பிரிவுகளில் தங்களது வீரத்தையும் பலத்தையும் வெளிப்படுத்தி வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 389 போட்டியாளர்கள் பங்கேற்றனர். கோயம்புத்தூர் மாவட்ட அணி முதலிடத்தையும், தென்காசி மாவட்ட அணி இரண்டாமிடத்தையும், திருவாரூர் மாவட்ட அணி மூன்றாமிடத்தையும், கரூர் மாவட்ட அணி நான்காம் இடத்தையும் பெற்றனர்.