, ,

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் உலக சாதனை மாநாடு

kogunadu arts and science college
Spread the love

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு விலங்கியல் துறை உலகத் திருக்குறள் மையம் ஆகியவை இணைந்து 100 மாநாடுகள் 100 நூல்கள் 100 தலைப்புகள் எனும் பொருண்மையில் லண்டன் அட்டம்ட் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்டிற்காக உலகச் சாதனை மாநாட்டினை நடத்தினர்.

இக்கல்லூரியில் திருக்குறள் காட்டும் அறிவியல் சிந்தனைகள் என்ற பொருண்மையில் அமைந்த இம்மாநாடானது கல்லூரியின் நூலகத்திலுள்ள குறுந்திரையரங்க அறையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. சங்கீதா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் செயலர் டாக்டர் சி. ஏ வாசுகி தலைமையுரை வழங்கினார். 32 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய உலகச் சாதனை ஆய்வுக்கோவையை கோவை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ச.குருஞானாம்பிகை வெளியிட முதல் படியைக் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி அம்மையார் பெற்றுக்கொண்டார். முனைவர் ச. குருஞானம்பிகா திருக்குறளின் பெருமையும் திருக்குறளைப் பல்வேறு நாட்டு அறிஞர்களும் கற்றுணர்ந்து ஆய்வு செய்த இடங்களையும் தனது சிறப்புரையில் கூறினார்.

காமத்துப்பாலிலுள்ள செய்திகள் மருத்துவ அறிவியலில் ஹார்மோன்களின் செயல்பாடுகள் மற்றும் அவை தெளிவுபடுத்தும் நுட்பங்களையும் கூறினார். முப்பத்தி இரண்டு கட்டுரையாளர்கள் தங்களது ஆய்வுக்கட்டுரையை வாசித்தனர். இந்நிகழ்வில் உலகத் திருக்குறள் மையத்தின் கோவை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் இராச இராசேசுவரி மற்றும் முனைவர் மனோகரன் கலந்துகொண்டனர். நிகழ்வின் இறுதியாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அ.இராஜலட்சுமி நன்றியுரை வழங்கினார்.