கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ”CRISPR/CAS9 TECHNOLOGY – 21 ஆம் நூற்றாண்டின் உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான மதிப்பீடு” எனும் பொருண்மையிலான மூன்று நாள் பயிலரங்கத்தின் தொடக்க விழாகல்லூரிக் கலையரங்கத்தில் தொடங்கியது.
வந்தோரை வரவேற்கும் விதமாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் உயிரித்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் பி.விஷ்ணுபிரியா வரவேற்றார். தொடர்ந்து கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமையுரையில், “மரபணுப் பொறியியல்” குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் மரபணுப் பொறியியல் துறையின் பேராசிரியர் முனைவர் கல்பனா சுரேந்திரநாத் புரதத் திருத்தம், மரபணுப் பொறியியல் குறித்தும், 21 ஆம் நூற்றாண்டின் உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மதிப்பீட்டின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு உரையாற்றினார். ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த பயிலரங்கத்தில் கலந்துகொண்டனர்.
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்று நாள் பன்னாட்டுப் பயிலரங்கம்

Leave a Reply