, ,

கைதான ஞானசேகரனுக்கு 4 மனைவிகள்

gnanasekaran
Spread the love

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் கடந்த 23 ஆம் தேதி ஒரு கட்டடத்திற்கு பின்புறம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஞானசேகரன் அந்த  நண்பரை மிரட்டி விரட்டியடித்துள்ளால். தொடர்ந்து,  அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூபுரம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அந்த மாணவி சொன்ன அங்க அடையாளங்களை வைத்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை  போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகின. ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு பின்புறம் பிரியாணி கடை வைத்துள்ளார். இரவு பிரியாணிக்கடையை மூடியதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்லும் ஞானசேகரன், அங்கு காதலர்கள் பேசிக் கொண்டிருந்தால், அவர்களை மறைந்திருந்து வீடியோ, போட்டோ எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

பிறகு அவர்களிடம் போய் அந்த வீடியோ, போட்டோவை காட்டி மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும் பணம் பறிப்பதுமாக இருந்துள்ளார். ஏற்கெனவே பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த ஞானசேகரனுக்கு 4 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் ஞானசேகரனின் டார்ச்சர் தாளாமல் பிரிந்து தனியே சென்றுவிட்டாராம். இப்போது, 3 மனைவிகளுடன் வாழ்ந்தும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதை வழக்கமாகவே வைத்திருந்துள்ளார்.