உலக மனநல தினத்தை முன்னிட்டு, கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி யில் 25 மணி நேரம் தொடர்ச்சியான மனநலம் பற்றிய சொற்
பொழிவு மற்றும் மனநலப் பயிற்சி உலக சாதனை முயற்சியாக நடைபெற்றது.
உலக மனநல நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வை மருத்தவ உளவியல் நிபுணர்கள் பாபு ரங்கராஜன் மற்றும் ரோஜா ரமணி ஆகியோர் வெற்றிகரமாக நடத்தினர். மாணவர்களின் மனநலம் சார்ந்த மனஅழுத்த மேலாண்மை, உணர்ச்சி நுண்ணறிவு, நேர்மறை மனநிலை, தலைமைத்துவ திறன், உளவியல் நல்வாழ்வு உள்ளிட்ட 13 தலைப்புகளில் பயிற்சியும் சொற்பொழிவும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் மனநலம் மற்றும் மனமகிழ்ச்சி மன்றம், கலாமின் உலக சாதனைகள் அமைப்பு மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் ஜிம்கானா இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கல்லூரியின் முதல்வர் முனைவர் தேவி பிரியா, கல்லூரியின் மாணவர் விவகார பிரிவு தலைவர் முனைவர் ரவி மற்றும் மனநலம் மற்றும் மனமகிழ்ச்சி மன்றச் செயலர் மணீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் 25 மணி நேரம் தொடர்ச்சியான மனநல சொற்பொழிவு



Leave a Reply