அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கேஎம்சிஹெச் மருத்து வமனை கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பார்க் மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அகண்ட எல்இடி திரையுடன் கூடிய பிரமாண்ட மீடியா ட்ரீயும் அந்தப் பகுதி முழுவதும் பிங்க் நிறத்தில் ஒளிர ஆரம்பித்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.
உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதத்தை பிங்க் பிங்க் அக்டோபர் மாதமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
கோவையின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் புற்று நோய்க்கு என இம்மருத்துவமனையில் ஒரு ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் மற்றும் ஒரு பிரத்யேக மார்பக புற்றுநோய் மையமும் செயல்படுகின்றன. இவற்றில் இருக்கும் சிகிச்சை வசதிகள் உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகளுக்கு இணையானவை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களிடையே, குறிப்பாக பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் பிங்க் வண்ண நிகழ்ச்சியுடன் கையெழுத்து இயக்க நிகழ்ச்சியும் அக்டோபர் 5-ம் தேதி நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் பெரும்பாலானோர் ஆர்வ த்துடன் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வுகளில் திரளான பொதுமக்கள், மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், மருத்து வர்கள், மாணவர்கள் மற்றும் கேஎம்சிஹெச் ஊழியர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, மற்றும் கேஎம்சிஹெச் மருத்து வமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி அவர்கள் துவக்கிவைத்த இந்நிகழ்ச்சியில் கோவை நகரின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், கோவை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையத்தின் முதன்மை ஆலோசகர் டாக்டர் ரூபா கலந்து கொண்டார்.
கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையமானது அனைத்துவித சிகிச் சைகளையும் ஒரே கூரையின் கீழ் அளிக்கும் ஒரு முழுமையான சிகிச்சை மையமாக 2013-ம் ஆண்டுமுதல் செயல்பட்டுவருகிறது. சிறந்த நிபுணர்கள், அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப உதவியுடன் நோயாளிகளுக்கு ஆலோசனை, பரிசோதனை, சிகிச்சை ஆகிய அனைத்தும் உள்ளடக்கிய மருத் துவ சேவைகளை உலகத்தரத்துக்கு நிகராக வழங்கிவருகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படும் வேளையில் கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையம் தனது 12-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்



Leave a Reply