கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை மற்றும் கே.எம்.சி.ஹெச். ஆராய்ச்சி மையம் இணைந்து, ஜூலை 6, 13, 20, 27 மற்றும் ஆகஸ்ட் 3 ஆகிய தேதிகளில், ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை நடத்தின.
இந்த முகாமில் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி அவர்கள் நேரில் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.
அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு மருத்துவ துறைகள் சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்டதோடு, தேவையான நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாமின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரடி பயனடைந்துள்ளனர். இதற்காக கிராம மக்கள் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.



Leave a Reply