கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மற்றும் ரேக்ளா தலைமைச் சங்கம் இணைந்து நடத்திய 5ஆம் ஆண்டு காளையர் திருவிழா 2024 கேபிஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு கோ பூஜை வழிபாட்டோடு துவங்கியது. கேபிஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி..ராமசாமி கலந்துகொண்டு நிகழ்வினைத் தலைமை தாங்கித் துவக்கி வைத்தார்.
கேபிஆர் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் அனந்தகிருஷ்ணன், செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர். உடன் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.கீதா, இந்நிகழ்வில் கேபிஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன், கே.பி.ஆர் பெண் பணியாளர்கள் கல்விப் பிரிவின் முதல்வர் முனைவர் சரவணபாண்டியன், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ரேக்ளா போட்டியில் 200 மீட்டர் பந்தயத்தில் சுமார் 250 வண்டிகளும், 300 மீட்டர் பந்தயத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வண்டிகளும் கலந்து கொண்டன. 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் பந்தயத்தில் முதல் பரிசு பெற்றவர்களுக்குத் தலா ஒரு ராயல் என்பீல்டு புல்லட் வண்டியும், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ஹோண்டா ஏக்டிவா வண்டியும் மூன்றாம் பரிசாக முக்கால் (3/4) பவுன் தங்க நாணயமும், நான்காம் பரிசாக அரை (1/2) பவுன் தங்க நாணயம், ஐந்தாம் பரிசாகக் கால்பவுன் தங்க நாணயம் (1/4), ஆறிலிருந்து பத்தாம் பரிசு வரை கிராம் தங்க நாணயங்களும் கேபிஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி..ராமசாமி, செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
மேலும் 200 மீட்டர் பந்தயத்தில் 11 முதல் 30 இடம் பிடிக்கும் காளைகளுக்கு வெள்ளி நாணயமும், 300 மீட்டர் பந்தயத்தில் 11 முதல் 25 இடம் பிடிக்கும். காளைகளுக்கு வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டன.
இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனர்.
கேபிஆர் கலைக் கல்லூரியில் காளையர் திருவிழா



Leave a Reply