கேஎம்சிஹெச் ராம்நகர் சிட்டி சென்டர் 33-வது ஆண்டு விழா​ மற்றும்​ சீனியர் சிட்டிசன் ஹெல்த் கிளப் 32-வது ஆண்டு விழா

Spread the love

கோவை கேஎம்சிஹெச் தனது கோவை ராம்நகர் சிட்டி சென்டர் மருத்துவமனையின்  33 வது ஆண்டு விழாவையும், சீனியர் சிட்டிசன் ஹெல்த் கிளப்பின்  முப்பத்தி இரண்டாவது ஆண்டு விழா கொண்டாடியது.
இந்த கிளப்பில் 60 முதல் 90 வயது வரை உள்ள 400 க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் வருடம் ஒருமுறை ஆண்டு விழா சமயம் சந்தித்துக் கொள்வர். கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இவர்களுக்கு என்று ஒரு பிரத்யேக உதவி மையம் செயல்படுகிறது மற்றும் வாட்ஸ் அப் குரூப்பும் உள்ளது.
இந்த கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மாதம் ஒரு முறை கேஎம்சிஹெச் சிட்டி சென்டரில் மருத்துவ ஆலோசனை இலவசம். மேலும் கேஎம்சிஹெச் பிரதான மருத்துவமையத்தில் உலகத்தரமான மருத்துவ சேவைகளை இவர்கள் சலுகை கட்டணத்தில் பெற்று பலன் பெறலாம். மேலும் வருடத்திற்கு ஒருமுறை இலவசமாக இசிஜி செய்து கொள்ளலாம்.
கேஎம்சிஹெச் ராம்நகர் சிட்டி சென்டரில் 24 மணி நேர பொது மருத்துவ ஆலோசனை, சிறப்பு மருத்துவர் ஆலோசனை, மாஸ்டர் ஹெல்த் செக்கப், கேத்லேப், டிஎம்டி, அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே, இசிஜி மற்றும் அனைத்து ஆய்வக சேவைகள் உள்ளன. மேலும் கிளப் உறுப்பினர்களுக்கு கேஎம்சிஹெச் ராம்நகர் சிட்டி சென்டரில் இருந்து கேஎம்சிஹெச் பிரதான மையத்திற்கு வந்து செல்ல இலவச போக்குவரத்து வசதியும் செய்து தரப்பட்டுள்ளது
ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார். ரூட்ஸ்  இண்டஸ்ட்ரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குனரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியின் செயலாளருமான டாக்டர் கவிதாசன் முதன்மை விருந்தினராக  கலந்து கொண்டார்.
கேஎம்சிஹெச் மருத்துவமனை பாலியேடிவ் கேர் ஆலோசகர் டாக்டர் ஹர்ஷாசிங் கிரிட்டிக்கல் லைஃப் கேர் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சீனியர் சிட்டிசன் ஹெல்த் கிளப் ஒருங்கிணைப்பாளர் எஸ். ஹரிஹரன் கிளப் நடவடிக்கைகள் குறித்த வருடாந்திர அறிக்கையை சமர்ப்பித்தார்.
விழாவில் உரை நிகழ்த்திய டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி மூத்த குடிமக்கள் தங்கள் உடல் நலனை நன்கு பேணி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் கேஎம்சிஹெச் ஹெல்த் கிளப் துவக்கப்பட்டது என்று கூறினார். அதற்காக அவர்களுக்கு உணவு, உடற்பயிற்சி முதலான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
கேஎம்சிஹெச் மருத்துவமனை எடுக்கும் முன்முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் மூத்த குடிமக்களுக்கு அவர் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.  ஆண்டு விழா கொண்டாடும் தருணத்தில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.