முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்து வமனைக்கு பிராண்ட் கோயம்புத்தூர் அம்பாசிடர் விருது வழங்கப்பட்டது. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் கோவை விளம்பர சங்கம் இணைந்து இந்த விருதை வழங்கின.
கோயம்புத்தூர் என்ற பிராண்டை தேசிய அளவில் மற்றும் சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கும் நிறுவனங்களுக்கு பிராண்ட் கோயம்புத்தூர் அம்பாசிடர் விருது வழங்கப்படுகிறது
கோவையை் சேர்ந்த கேஎம்சிஹெச் 34 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரமான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. கோயம்புத்தூரை தலைசிறந்த மருத்துவ கேந்திரங்களில் ஒன்றாக விளங்கச் செய்வதில் கேஎம்சிஹெச் மருத்து வமனைக்கு ஒரு தனிப்பட்ட இடம் உண்டு.
உலகத் தரமான மருத்துவ சேவை, புதுமையான மருத்துவ தொழில்நுட்பங்கள், நோயாளிகள் மீது தனிப்பட்ட அக்கறை ஆகியவற்றுடன் ஒரு முன்னணி பல் துறை மருத்துவ மையமாக கேஎம்சிஹெச் உருவெடுத்துள்ளது மட்டுமில்லாமல் கோ வையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.
பிராண்ட் கோயம்புத்தூர் அம்பாசிடர் விருது வழங்கும் விழாவானது கோவையில் ஆறாவது முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் லிமிடெட் தலைவர் ஆர் தினேஷ் கேஎம்சிஹெச் குரூப் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமிக்கு இந்த விருதினை வழங்கினார்.
டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தனது ஏற்புரையில் பெருமைமிகு இந்த விருதுக்காக தனது நன்றிகளைத் தெரிவித்தார். கேஎம்சிஹெச் மருத் துவ குழுவினர் அனை வரது கடுமையான உழைப்பிற்கும் அர்ப் பணிப்பு மிக்க சேவைக்கும் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோயம்புத்தூர் என்ற பிராண்டின் இமேஜை உலக அரங்கில் மேலும் உயர்த்துவதற்கு தமது மருத்துவமனை மேலும் தொடர்ந்து அயராது பாடுபடும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.
கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு பிராண்ட் கோயம்புத்தூர் அம்பாசிடர் விருது

Leave a Reply