, ,

கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் தர்மபுரியில் இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் பற்றிய கருத்தரங்கு

kmch hospital
Spread the love

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் தர்மபுரியில் இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள், சிகிச்சைகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
2250 படுக்கை வசதியுடன் தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான  கே.எம்.சி.ஹெச், கோயம்புத்தூர் சமீபத்தில், இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்கள் (Gastroenterology and Hepatology) குறித்த கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. இந்த கருத்தரங்கு கேஸ்ட்ரோஹெப்கான் என்ற பெயரில் தர்மபுரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு, சிறப்பு சிகிச்சை சேவைகளை வழங்குவதில் உள்ள நடைமுறைச் சவால்கள் மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர். கருத்தரங்கில் இத்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. கைதேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் தங்கள் அறிவு மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்  200-க்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்
முன்னதாக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் கே. அமுதவள்ளி கருத்தரங்கை துவக்கிவைத்தார். கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். நல்லா ஜி. பழனிசாமி தனது  உரையில், இரப்பை குடல், கல்லீரல் மற்றும் பித்தப்பை நோய்களுக்கான உலகத் தரமான மருத்துவ சேவைகளை கே.எம்.சி.ஹெச் -இல் வழங்கப்படுகிறது தென் மற்றும் மேற்கு தமிழகத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் கே.எம்.சி.ஹெச் -இல் மிக அதிகமாக நடைபெறுகிறது என்றும்  புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள் உதவியுடன் நோயாளிகளுக்கு மேம்பட்ட சேவவைகளை அளிப்பதற்கு இதுபோன்ற கருத்தரங்குகள் உதவியாக இருக்கும்   என்று கூறினார்.
கேஎம்சிஹெச் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, நவீன மருத்துவ சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு கேஎம்சிஹெச் மருத்துவமனை உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.