​கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் ரோஸ் தின விழா

Spread the love

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் உலகத்தரமான அதிநவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த  புற்றுநோய் சிகிச்சை  மையம் செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு துவக்கப்பட்ட இம்மையம், அன்று முதல் இன்று வரை புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தலைசிறந்த    மருத்துவ சேவைகளை அளித்து வருகிறது.
புற்றுநோயுடன் மனவுறுதியுடன் போராடி குணமடைந்தவர்களையும் நோயிலிருந்து மீண்டுவர அவர்களுக்கு உதவிகரமாக செயல்பட்டவர்களையும் பாராட்டும் வகையிலும் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் 2013 ஆம் ஆண்டு முதல்  வருடா வருடம் ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
ரோஸ் தின விழாவை முன்னிட்டு கேஎம்சிஹெச் ஒருங்கிணைந்த  புற்றுநோய் சிகிச்சை  பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தது. கேஎம்சிஹெச் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர், மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.  பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புற்றுநோயாளிகள் உதவிக் குழு உறுப்பினர்கள் கேஎம்சிஹெச் மருத்துவமனையுடன் இணைந்து உருவாக்கிய புற்றுநோயாளிகளின் அனுபவம் மற்றும் கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உள்ள  உலகத்தரமான சிகிச்சை வசதிகள் குறித்து விளக்கும் ஒரு வீடியோ படம் திரையிடப்பட்டது.
கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர்  டாக்டர் நல்லா ஜி  பழனிச்சாமி விழாவிற்கு தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். பிரபல பேச்சாளர் முனைவர் ஜெயந்திஸ்ரீ  பாலகிருஷ்ணன்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
முன்னதாக காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மு.திவாகர்அனைவரையும் வரவேற்றார். கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் .ஆனந்த் நாராயணன் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார். மருந்தியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம்குமார் நன்றிஉரை வழங்கினார்.