, , ,

கேஎம்சிஹெச் சார்பில் 28ஆம் ஆண்டு கோவை மாரத்தான் –2024

kmch marathon
Spread the love

பக்கவாதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோவையின் முன்னணி மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனை, கோவை மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது. டிசம்பர் 1-ம் தேதியன்று கோவையில் 28-ஆம் ஆண்டின் “கேஎம்சிஹெச் கோவை மாரத்தான் 2024” நிகழ்ச்சியை  கோவை மாநகராட்சி மேயர் கே. ரங்கநாயகி கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்று மறுவாழ்வு  பெற்றவர்கள், மருத்துவர்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உட்பட 4000 பேர்  கலந்துகொண்டனர், 18 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த மாரத்தான் கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனையில் துவங்கி அவினாசி ரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையில்  நிறைவுற்றது.

அதேசமயம் உரையாற்றிய கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி, ‘கோவையில் கேஎம்சிஹெச் சார்பாக முதல் மாரத்தான் 1991-ல் நடைபெற்றது. பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற மாரத்தான்கள் நடத்துகிறோம்.  உரிய சிகிச்சைகளை விரைவாகவும் முன் கூட்டியே  எடுத்தால் பக்கவாதத்தால் ஏற்படக்கூடிய பெரும்பாலான பின்விளைவுகளைத் தவிர்த்துவிடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

மாரத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.