கேஎம்சிஎச் மருத்துவமனையில் செயல்படும் இண்டர்வென்ஷனல் கதிரியக்கத்துறை 1991 ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரிய அளவிலான திரைகளை கொண்ட மானிட்டருடன் கூடிய பை-பிளேன் கேத் லேப் -ஐ இந்தியாவில் முதன்முறையாக கேஎம்சிஎச் மருத்துவமனை அறிமுகம் செய்து அதன் மூலம் ஏராளமான நுண்துளை அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
கேஎம்சிஎச் கதிரியக்கத் துறை தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் மற்றும் துறை துணைத் தலைவர் டாக்டர் பங்கஜ் மேத்தா ஆகியோர் 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்திய இண்டர்வென்ஷனல் ரேடியாலஜி கழகத்தின் ஆரம்ப நிலை உறுப்பினர்களாக செயல்பட்டனர். கேஎம்சிஎச்-ல் இரு நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் லண்டனில் இருந்து டாக்டர் கிருஷ்ணபிரசாத் மற்றும் டல்லாஸ் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இக்கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் ரேடியாலஜிஸ்டுகள் கலந்துகொண்டு நேரடி செயல்விளக்க பயிற்சி பெற்றனர்.
அதிநவீன கேத்லேப், அல்டரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன் ஆகிய வசதிகளுடன் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறை மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார். இந்த திட்டம் பூர்த்தியடையும் போது கேஎம்சிஹெச் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறை இந்தியாவிலேயே முதன்மையான ஒன்றாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். தரமான மருத்துவ சேவைகளுக்கு நாட்டிலேயே முதன்மையான மருத்துவமனை என்ற இலக்கை நோக்கி கேஎம்சிஹெச் பயணித்து வருவதாக செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தெரிவித்தார்.
Leave a Reply