, ,

கெட் அவுட் ஸ்டாலின் … 10 லட்சம் பேர் பதிவு செய்ததாக செய்ததாக அண்ணாமலை பெருமிதம்

get out stalin
Spread the love

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு இனி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் கோ பேப் மோடி என சொல்ல மாட்டார்கள் கெட் அவுட் மோடி என்று சொல்வார்கள் என கூறியிருந்தார். இதனை அடுத்து #GetOutModi எனும் ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

தொடர்ந்து, திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி காலை, பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை குறிப்பிட்டு இன்று காலை 6 மணிக்கு தான் #கெட் அவுட் ஸ்டாலின் என்று பதிவிட்டார். இதனை பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் எக்ஸ் தள பக்கத்தில் ட்ரெண்ட் செய்தனர்.

அண்ணாமலை, ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தில் உள்ள இந்த திமுக தலைமையிலான அரசை விரைவில் மக்கள் வெளியேற்றம் செய்யப்படுவார்கள் .” என பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவு கடந்த 9 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியினர் பதிவு செய்த எக்ஸ் தள பதிவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் மறுபதிவு இட்டுள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கரத்தை வலுப்படுத்த நம் பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு, நம் தலைவர் சொல்லிபடி 9மணி நேரத்தில் 10லட்சம் கெட்அவுட் ஸ்டாலின் ட்வீட்களை பதிவு செய்த அனைவருக்கும் தமிழக பா.ஜ.க சமூக ஊடகப்பிரிவு சார்பில் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.