கோவை மாநகர அதிமுக தலைவரும் 47வது வார்டு கவுன்சிலருமான பிரபாகரன் மக்களக்கு வேண்டு கோள் விடுதது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப
தாவது, நமது வார்டில் தற்போது எங்குமே குப்பை தொட்டி வைப்பது இல்லை.அதற்கு பதிலாக உங்கள் வீடுகளுக்கே ஆட்டோ அல்லது தள்ளுவண்டியில் வந்து குப்பைகளை தரம் பிரித்து வாங்க ஏற்பாடு செய்துள்ளோம். வீடு தேடி வரும் வண்டிகளில் குப்பைகளை போடவும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் குப்பைகளை வீட்டில் வையுங்கள். திங்கட்கிழமை குப்பைகளை சேகரிக்க வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கவும். தற்போது, மக்கள் குப்பைகளை ஆங்காங்கே வைத்து விட்டு சென்று விடுகின்றனர். ஒருவர் செய்யும் தவறால் மற்றவர்களும் அதே போல குப்பைகளை வைத்து செல்வதால் ,குப்பை மேடாக காட்சியளிக்கிறது. குப்பைகளை பெற்று செல்ல மாநகராட்சிக்கு சரி செலுத்தி விட்டு, ஏன் ரோட்டில் வீசி செல்கிறீர்கள். இதனால், உங்கள் சுற்றுப்புறத்தில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, நோய் பரவ காரணமாக அமைகிறது. தற்போது, மர்ம காய்ச்சம் பரவி வருகிறது. எனவே, மக்கள் தங்களை பற்றியும் சுற்றியுள்ள சமுதாயத்தை பற்றியும் யோசிக்க வேண்டும். குப்பைகளை அள்ள ஆட்டோ, தள்ளுவண்டி பயன்படுத்தப்படுகிறது. அதில், மட்டுமே குப்பையை கொட்டி தூய்மையான பகுதியாக பராமரிக்க மக்கள் உதவ வேண்டும்.
குப்பையை ஆட்டோ, தள்ளுவண்டியில் மட்டுமே போட வேண்டும் கவுன்சிலர் பிரபாகரன் கோரிக்கை



Leave a Reply