கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி சூலூரில் இருந்து அப்போதைய இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்டோர் சென்ற Mi-17 V5 ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிலையில், அதில் பிபின் ராவத் உட்பட விமானத்தில் பயணித்த 12 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க அப்போதை குழு அமைக்கப்பட்டு இருந்தது. விபத்து நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு விபத்திற்கு என்ன காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான தகவல்கள் லோக்சபாவில் தாக்கலான பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
அதில், இந்த விபத்திற்கு மனிதப் பிழையே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நடந்த மற்ற விபத்துகள் குறித்தும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றத்தால் அங்கு எதிர்பாராத விதமாக சில மேகக் கூட்டங்கள் நுழைந்தன.
இதனால் ஹெலிகாப்டர் CFIT என்று வகைப்படுத்தப்படும் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது” என்று தெரிவித்திருந்தது.
விமானம் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே, எதிர்பாராத விதமாக விமானம் கடல் அல்லது மலையில் மோதி விபத்து ஏற்படுவதே CFIT விபத்து என்று அழைக்கப்படுகிறது. எதிரே என்ன இருக்கிறது என்பது தெரியாமல் இருக்கும் போது தான் பொதுவாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் பலி; விபத்துக்கான உண்மை காரணம் வெளியீடு!



Leave a Reply