,

குடியரசு தினத்தையொட்டி நீரில் மிதக்கும் தேச தலைவர்கள் உருவத்தை வரைந்த கோவை கலைஞர் 

republic day
Spread the love
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை நாடு முழுவதும் பிரம்மாண்டமாகவும் கொண்டாடுவதற்கு அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற நகை வடிவமைப்பாளர், நீரில் வண்ண கோலப்பொடி மற்றும் மாவை கொண்டு மிதக்கும் மகாத்மா காந்தி மற்றும் மகாகவி பாரதியாரின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார். வழக்கமாக இந்த பொடிகள் சிறிது நேரத்தில் நீரில் கரைந்துவிடும் என்பதால் அது கரைவதற்குள் இரண்டு ஓவியங்களையும் வரைந்துள்ளதே இதன் சிறப்பம்சமாகும். தேசத்தலைவர்களின் ஈர நெஞ்சம் என்றும் நம் இதயத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நீரில் தலைவர்களின் உருவத்தை வரைந்துள்ளதாக UMT ராஜா தெரிவித்துள்ளார்.