உலக தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கோவை காளப்பட்டி டாக்டர். என்.ஜி.பி கலைக்கல்லூரியில் 11 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அதோடு, விருது வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியை டாக்டர் என்.ஜி.பி கல்விகுழும செயலர் தவமணி பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரையாற்றினார்.
விழாவில் உ.வே.சாமிநாத ஐய்யர் விருது பேராசிரியர் பாண்டு ரங்கனுக்கு வழங்கப்பட்டது. பெரியசாமித்துரன் படைப்பாளர் விருது எழுத்தாளர் வண்ணதாசனுக்கும் டாக்டர் நல்ல. பழனிச்சாமி பிறதுறைத் தமிழ் தொண்டர் விருது முனைவர் த.வி. வெங்கடேசனுக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருதுகன் சொ.சேதுபதி எழுத்தாளர் புன்னகை பூ ஜெயக்குமார், சூலூர் ஆனந்திக்கு வழங்கப்பட்டது. விருதுகளை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உலக தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் தலைவரும் கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவருமான நல்ல ஜி. பழனிச்சாமி வரவேற்று பேசியதாவது, ‘இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளள வேலம்மாள் அறக்கட்டளை முத்துராமலிங்கம் அவர்களை வரவேற்கிறோம். விழாவுக்கு அவரை அழைத்த போது, எனக்கு தமிழே தெரியாத என்னை ஏன் அழைக்கிறீங்க? என்று கேட்டார். அப்படியில்லை, உங்களை போன்றவர்
களால்தான் தமிழ் வளர்கிறது என்று கூறி அவரை விழாவுக்கு அழைத்து வந்தோம். இப்போதும், கிராமத்தில் உள்ள மனிதர்களால்தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் இனம் பழைமையான இனம். முதல் சங்கம், நடுசங்கம், புது சங்கம் கண்ட சமூகம் இது. தமிழ் நாகரிகம் நதிக்கரை நாகரீகம். வைகைக் கரையோரம், காவிரி கரையோரம்,தாமிபரணி கரையோரம் தமிழ் நாகரீகங்கள் செழித்து வளர்ந்தது. தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, ஆடல் பாடல்கள், இலக்கியங்கள் எல்லாமே மிகவும் பழைமையானது.
கணியன் பூங்குன்றனார், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றும் அனைவரும் சமம் என்று சொன்னார். திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறினார். இப்படிப்பட்ட பெரிய சிந்தனை கொண்ட சமுதாயம் நம் தமிழ் சமுதாயம். தமிழ் மெல்ல இனி சாகும், அப்படினு ஒரு வார்த்தையை பாரதியார் அந்த காலத்திலேயே சொன்னார். அதுக்கு காரணம், அந்த மாதிரி ஒரு நிலை அப்பவே தொடங்கியதுதான். பாரதியாரின் 143 வது ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த 11 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பிரதமர் மோடி பாரதியாரின் புத்தகங்களை தொகுத்து அழகான ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். பாரதியார் போன்ற பல கவிஞர்கள் தமிழுக்காக பாடுபட்டுள்ளனர். உவே, சாமிநாத ஐய்யர் ஊர் ஊராக சென்று பனை ஓலையில் எழுதப்பட்ட இலக்கியங்களை சேகரித்து காப்பாற்றினார்.
அதனால், தமிழ்நாடு அரசு அவரின் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறு மலர்ச்சி நாளாக அறிவித்து கவுரவித்துள்ளது. நாமும் தமிழை வளர்க்க வேண்டும் என்ற
எண்ணத்தில்தான் தமிழுக்கு சேவை செய்ய களம் இறங்கினோம். கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழ் அறிஞர்களை கவுரவித்து வருகிறோம். இந்த நிகழ்ச்சிக்கு பல சிறப்பு அறிஞர்கள், சான்றோர்கள் வந்துள்ளனர். கே.பி.ஆர் மில்ஸ் அதிபர் கே.பி.ராமசாமி இங்கு வந்தது மிகவும் பெருமையாக உள்ளது. எல்லவற்றையும் விட எனது கல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் வந்துள்ளனர். எங்கள் கலைக்கல்லூரி மாணவர்கள் மிகுந்த தமிழ் பற்று கொண்டவர்கள். எங்கள் மையத்தை சிறப்பாக நடந்த இந்த மாணவர்கள்தான் உறுதுணையாக உள்ளனர். கேஎம்.சி.எச் மருத்துவமனைக்கு இன்று மற்றொரு சிறப்பான நாள். எங்களுடன் பணியாற்றும் அனைவருக்கு நன்றி சொல்லும் நன்னாள் இன்று. எனவே, இந்த நிகழ்ச்சிக்கு வந்து எங்களை கவுரவித்த அனைவருக்கும் நன்றி’ என்று பேசினார்.
விழாவில் தமிழ் பண்பாட்டு தலைவர் சிற்பி பாலசுப்ரமணியம் பேசிய போது, ”டாக்டர்.நல்ல ஜி பழனிச்சாமிக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்க வேலம்மாள் பள்ளி தலைவர் முத்துராமலிங்கம் இங்கு வந்ததும் மகிழ்ச்சி. இரு நாட்களுக்கு முன்பு உலக செஸ் சாம்பியன் பெற்ற குகேஷ் வேலம்மாள் பள்ளி மாணவர். குகேஷை வார்த்து எடுத்தது வேலம்மாள் பள்ளி என்றால் மிகையல்ல. சிறப்பு விருந்தினர்களில் கே.பி. ஆரை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இவர். கோவையில் தொழில் புரட்சியையும், பெண்கள் கல்வியில் புரட்சியும் ஏற்படுத்தியவர்” என்று பேசினார்.
கிராமத்திலுள்ள மனிதர்களால்தான் தமிழ் இன்னும் வாழ்கிறது உலக தமிழ்ப்பண்பாட்டு விருது வழங்கும் விழாவில் நல்ல ஜி.பழனிச்சாமி பேச்சு

Leave a Reply