தமிழக அரசு கிராம மற்றும் மாவட்ட ஊராட்சி நிலைகளில் உள்ள கடைகள், இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் குத்தகை உரிமங்களை பொது ஏலத்தில் விடும் முறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு பிரச்சினையை தடுப்பதற்காக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கி, வாடகை நிர்ணய குழுவை நியமித்து அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது.
ககன் தீப் சிங் பேடி எழுதிய அரசாணையில் குறிப்பிடப்படுவதாவது:
மே மாதம் 5-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற வணிகர் சங்க பேரமைப்பின் கோரிக்கை பிரகடன மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், பிற மாநகராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதேபோல் வழிகாட்டுதல் குழுக்கள் அமைக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த குழுக்களின் முக்கிய பணி:
-
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் குத்தகை இனங்கள் — கடைகள், வணிக வளாகங்கள், இடங்கள் ஆகியவற்றின் வாடகைகளை பொது ஏலத்தில் விடும் போது ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை தவிர்க்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் செயல்படுத்துதல்.
-
பொது ஏலங்கள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் வலுப்படுத்தல்.
-
உள்ளாட்சி வருவாயில் வீழ்ச்சி ஏற்படாமல் செய்ய நடவடிக்கை எடுப்பது.
இதன் மூலம், கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள வணிக இடங்களின் குத்தகை முறைகள் நியாயமானதாகவும், சட்டபூர்வமாகவும் நடைபெறும் என்பதே அரசு நோக்கம்.



Leave a Reply