,

கிணத்துக்கடவில் 12 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் இருமுறை பதிவு – எம்.எல்.ஏ தாமோதரன் மனு

Spread the love

கிணத்துக்கடவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், பாஜக மூத்த நிர்வாகி வசந்தராஜன், பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமாரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ தாமோதரன், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 12,000 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருமுறை பதிவாகி உள்ளதாகக் கூறினார். இதே போன்று அனைத்து தொகுதிகளிலும் இதுபோன்ற தவறுகள் இருக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு பெயரும் ஒரே தொகுதிக்குள், வார்டுகள் மாறி மாறி இருமுறை பதிவாகி இருப்பதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், தற்போது திருப்பூரிலிருந்தும் கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுவதால் குடிநீரின் தரம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் பெரிய அளவிலான போராட்டம் உருவாகும் சூழல் நிலவுவதாகவும் எம்.எல்.ஏ தாமோதரன் எச்சரித்தார்.