தமிழ்நாடே வியக்குமளவுக்கு நடிகர் கிங்காங் வீட்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனது மகள் திருமணம் முடிந்ததும் கிங்காங் சில விஷயங்களை மகிழ்ச்சியுடன் கூறியுளார். அவர், கூறியுள்ளதாவது,
‘திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருவார் என எதிர்பார்க்கவே இல்லை. அவர் வந்ததும் என்னை பார்த்துவிட்டு, ’நீயும் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறாயே’ என சிரித்தபடியே கூறினார். மணமேடையில் என் குடும்பத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அதிமுக ஜெயக்குமார் எப்போதுமே ஜாலியாக இருக்கக்கூடிய நபர். திருமண வந்தவர் என்ன நினைத்தாரே தெரியவில்லை. என்னை இடுப்பில் வைத்துக்கொண்டார். விசிக தலைவர் திருமாவளவன் வந்ததும், ‘என்னையா மாநாடு மாதிரி கல்யாணத்தை நடத்திட்ட?’னு சொன்னாரு. போகும்போது கையெடுத்து கும்பிட்டேன். அந்த கைய பிடிச்சி அவரு முத்தம் கொடுத்தாரு. ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. பிரேமலதா மேடம் வந்ததும் எனக்கு சந்தோசமாக இருந்தது” என்றார்.
முதலில் நான் எளிமையாக திருமணத்தை நடத்தலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் பிரபலங்களுக்கு பத்திரிக்கை கொடுக்கவும் நிகழ்ச்சி பெரிதாகி விட்டது. நான் எதிர்பார்த்ததை விடவும் சிஎம் போன்றோர் வந்ததால் கூட்டம் கட்டுங்கடங்காமல் வந்ததால் தேவயானி, விஜய் சேதுபதி, பாக்கியராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலரால் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை.
தொடர்ந்து வடிவேலு குறித்து பேசுகையில், “திருமணத்திற்கு வரவில்லை என்றாலும் போனில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார். ‘முதலமைச்சர் கலந்து கொண்டது மிகப் பெரிய விஷயம். அவர் வந்ததன் மூலம் தமிழ்நாட்டில் 8 கோடி மக்களும் திருமணத்திற்கு வந்ததாக நினைத்துக் கொள். திருமணத்திற்கு வராதவர்களை நினைத்து வருத்தப்படாதே. திருமணம் இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதற்கு காரணம் உன்னுடைய உழைப்பு தான் என வாழ்த்து தெரிவித்தார். அதோடு, 1 லட்சம் வடிவேலு மொய்யாக வைத்தார். வடிவேலு வரவில்லை எனினும்அவரது மேனேஜர் சங்கர், மேக்கப் மேன் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply