,

காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

r n ravi
Spread the love

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டு தை 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று,   திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.இந்த நிலையில்,  திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகை  ஆளுநர் மாளிகையில் அலங்கரிக்கப்பட்ட  காவி உடையில் நெற்றியில் விபூதியுடன் கூடிய  திருவள்ளுவர் படத்திற்கு ஆளுனர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.