நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள நடுவட்டம் பகுதியில் சமீப நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நடுவட்டம் காவல் நிலையத்திற்குள் இரவு 8:30 மணிக்கு சர்வ சாதாரணமாக உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்திற்குள் வந்து நோட்டமிட்ட சிறுத்தை மெதுவாக வெளியே சென்றது. காவல் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் அச்சத்தோடு சிறுத்தை வெளியே சென்றவுடன் கதவுகளை சாத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல் நிலையத்திற்குள் வந்த சிறுத்தை

Leave a Reply