தமிழகத்தில் கால் டாக்சி சேவைகளை நெறிப்படுத்தும் நோக்கில், அரசு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஆன்லைன் டாக்சி செயலிகளின் கட்டண முறைகள் மற்றும் பயணிகள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஒரு புதிய செயலியைத் தொடங்க அரசுத் திட்டமிட்டுள்ளது.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற ஆன்லைன் டாக்சி செயலிகள் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், காட்டப்படும் கட்டணத்துக்கு மேல் வசூல், புக்கிங் கேன்சல் செய்வது, அல்லது நேரத்தில் வராமல் தவிக்கும் நடவடிக்கைகள் குறித்து பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், தமிழக அரசு விரைவில் புதிய டாக்சி கொள்கையை அறிவிக்கவுள்ளது. புதிய கொள்கையின் முக்கிய அம்சங்கள்:
-
முதல் 3 கி.மீ.க்கு அடிப்படை கட்டண நிர்ணயம்
-
தரவிரைவில் கட்டண விகிதம் மாற்றம்
-
தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு லாபமான பங்கு
-
ஆன்லைன் புக்கிங்கை நியாயமற்ற வகையில் ரத்து செய்தால் அபராதம்
-
அனைத்து டாக்சி செயலிகளுக்கும் ரூ.5 இலட்சம் உரிமைக் கட்டணம் (5 ஆண்டுகளுக்கு)
-
பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஒருங்கிணைந்த நெறிமுறைகள்
-
குறைதீர்க்கும் சட்டபூர்வமான வழிமுறைகள்
இக்கொள்கை வழிகாட்டுதல்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, பொதுமக்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் கருத்துகளை பெற்றே இறுதி வடிவம் நிர்ணயிக்கப்படும் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் கட்டுப்பாடின்றி செயல்படும் ஆன்லைன் டாக்சி தளங்களை ஒழுங்குபடுத்தியும், பயணிகள் நலனும் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Leave a Reply