மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில், கிரஷர் மற்றும் கல்குவாரி ஓட்டுநர்களுக்கான மாபெரும் இலவச இருதய மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம் இரண்டு நாட்களாக சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாம், காரமடை ரோட்டரி சங்கம், திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்கம், ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் அறக்கட்டளை, காரமடை கல்குவாரி கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் காரமடை வட்டாரப் பள்ளிகள் இணைந்து நடத்தியது.
“இதயம் காப்போம்” எனும் நடமாடும் பேருந்து திட்டத்தின் கீழ், இந்த முகாம் காரமடை ஆசிரியர் காலனி ரூபா சதீஷ் அலுவலகத்தில் நடைபெற்றது.
ரோட்டரி சங்க தலைவர் குமணன் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏ.கே.எஸ். ஞானசேகரன், சோமசுந்தரம், விஜய் பிரபு, சிவசதீஷ்குமார், கப்பல் நந்தகுமார், ரூபா சதீஷ், தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒருங்கிணைத்தனர்.
செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் (ஏ.கே.எஸ்.) சிவபாலன் முகாமை துவக்கி வைத்தார்.

ரேவதி மருத்துவமனை தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆலோசனையின் பேரில் டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவக் குழு, நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு, இசிஜி, எக்கோ, நுரையீரல் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டது.
கல்குவாரி கிரஷர் ஓட்டுநர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல பொதுமக்கள் பரிசோதனையில் பங்கேற்று பயனடைந்தனர்.
பொருளாளர் தீபன் குமார் நன்றி தெரிவித்தார்.



Leave a Reply