கோவை தனியார் காப்பகத்தில் தங்கி அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனை காப்பக பொறுப்பாளர் பெல்டால் அடித்து துன்புறுத்திய செய்தியை அறிந்ததும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி. ஆர்.ஜி அருண்குமார் அச்சிறுவனை பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இந்த விவகாரத்தில் காவல்துறை ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், சிறுவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். உடன் கொண்டையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் கோவிந்தராஜ், கோட்டையை பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை நிலை ஆசிரியர், பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
காப்பகத்தில் துன்புறுத்தப்பட்ட சிறுவனை சந்தித்து ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமார்



Leave a Reply