,

காட்பாடியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு

ramraj cotton
Spread the love

தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டுள்ள இந்நிறுவனம்.
தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது. ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது அடுத்த பெருமைமிகு புதிய ஷோரூமை செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி காட்பாடி வேலூர் சாலையில் துவங்கி உள்ளது.
வேலூர் விஐடி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர். ஜி. விஸ்வநாதன் ஷோரூமை திறந்து வைத்தார். வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டல குழு தலைவர் வி. புஷ்பலதா வன்னிய ராஜா மங்கள் ஒளி ஏற்றி வைத்தார். வேலூர் ஹோட்டல் டார்லிங் ரெசிடென்சியின் நிர்வாக இயக்குனர் எம். வெங்கடசுப்பு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வேலூர் ஹோட்டல் டார்லிங் ரெசிடென்சியின் நிர்வாக இயக்குனர் எம். வெங்கடசுப்பு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வேலூர் ஸ்ரீ லட்சுமி ஜூவல்லரியின் சி. வ. முகுந்த் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.ஆர். அருண் ஈஸ்வர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் எஸ். அஸ்வின் வரவேற்றனர்.
ராம்ராஜ் காட்டன். உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களும் மிருதுவான பருத்தி நூலிழைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட துணிரகங்களிலிருந்து முன்னணி வல்லுநர்களை கொண்டு வடிவமைத்து விற்பனை செய்யப்படுகிறது. வேட்டிகள், சர்ட்டுகள், பனியன்கள் தயாரித்து தென்னிந்தியா முழுவதும் மட்டுமல்லாது வடமாநிலம் மற்றும் வெளி நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே வேட்டிக்கென்று தனி முத்திரை பதித்து முதலிடத்தில் உள்ள ஒரே நிறுவனம் ராம்ராஜ் காட்டன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ராம்ராஜ் காட்டன் ஷோரூம்களில் அட்ஜஸ்டபிள் வேட்டி, பேன்சி பார்டர் வேட்டி, கறை படியாத வேட்டி, நறுமண வேட்டி, ரிங்கிள் பிரி வேட்டி, சுப முகூர்த்த வேட்டி, எம்ப்ராய்டரி வேட்டி, மயில்கண் வேட்டி, பஞ்ச கச்ச வேட்டி, பட்டு வேட்டி என வேட்டி ரகங்கள் ஏராளம். காட்டன் சர்ட்டுகள், எம்பராய்டரி சர்ட்டுகள், ரிங்கிள் பிரி’ சர்ட்டுகள், கூல் காட்டன் சர்ட்டுகள், சுபமுகூர்த்த சர்ட்டுகள், அல்டிமேட் சர்ட்டுகள், டிசைனர் சர்ட்டுகள், பட்டு சர்ட்டுகள், பார்டர் மேட்சிங் லினன் சர்ட்டுகள் என ரகங்கள் ஏராளமாக உள்ளன.
இளைஞர்களின் மனம் கவரும் வகையில் பல வண்ணங்களில் டி- சர்ட்டுகளும் இங்கு கிடைக்கின்றன.
அதே போல், ஆண்களுக்காக பிளையின் வெண்மையில் மட்டுமின்றி டிசைனுடன் கூடிய பனியன்கள் ஐட்டிகள், ‘டிரங்க்ஸ்’ எனப்படும் வேட்டி கட்டிக் கொள்பவர்களுக்கென்றே பிரத்யேகமான ‘வேட்டி டிராயர்கள்’ என்ற உள்ளாடையும் ராம்ராஜ் காட்டனில் கிடைக்கிறது. வேட்டிக்கட்டி கொள்பவர்களின் வசதியை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பெல்ட்டுகள், கைக்குட்டைகள், சாக்ஸ், டவல்கள். என்று நீண்டுகொண்டே போகின்றன.
பெண்களுக்கென உள்ளாடைகளும் ராம்ராஜ் காட்டன் ஷோரூம்களில் கிடைக்கின்றன. இளைஞர்களை கவரும் வகையில் யூத் கலெக்ஷன் மற்றும் குழந்தைகளுக்கான வேட்டி சட்டைகள், இளைஞர்களை கவரும் வகையிலான வெல்குரோ பாக்கெட் வேட்டிகள், லினன் சர்ட்டு வகைகளும், பெண்களுக்கான லெக்கின்ஸ், சிம்மிஸ் மற்றும் அனைத்து விதமான உள்ளாடைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.