கோவை மருதமலை அடிவாரப் பகுதி சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்குகளில் காட்டு யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் சம்பவம் அனைவரும் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மருதமலை கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்குள் காட்டு யானைகள் அவ்வப்போது வருவது வழக்கம் அதேபோல மருதமலை வனப்பகுதி ஒட்டியுள்ள சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை கிடங்குகள் உள்ளது.
ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரக்கூடிய மருந்து கழிவுப்பொருள் வீட்டின் கழிவு பொருட்கள் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை அங்கு கொட்டி வருகின்றனர் வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதி என்பதால் அவ்வப்போது இரவு நேரங்களில் காட்டு யானைகள் குப்பை கிடங்களுக்குள் சென்று அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு வருகிறது இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் இந்த பகுதியில் குப்பை கிடங்கை உடனடியாக அகற்ற வேண்டும் இதனால் வனவிலங்குகள் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடுவதால் நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட நோய்
தொற்று ஏற்பட்டு இறக்கக்கூடிய அபாயம் இருந்து வருவதாக பலமுறை வனத்துறைக்கும் சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் அளித்துள்ளனர் இருந்தபோதிலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் குப்பை கிடங்கை அகலப்படுத்தி அதிக அளவில் குப்பை கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மருதமலை வனப்பகுதி ஒட்டியுள்ள குப்பை கிடங்கில் ஒற்றைக் காட்டு யானை பகல் நேரத்திலே அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
காட்டு யானைக்கு உணவாகும் பிளாஸ்டிக் கழிவுகள்

Leave a Reply