கர்நாடகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பட்டியலின மக்களுக்கு முடிதிருத்த மறுத்ததையடுத்து, அரசு தரப்பில் முடி திருத்தும் கடை திறக்கப்பட்டது. சமூக நலத்துறையால் திறக்கப்பட்ட இந்த ஷாப், கர்நாடக அரசால் நடத்தப்படும் முதல் முடி திருத்தும் கடை ஆகும்.
கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில், சிங்கத்தல்லூர் கிராமத்தில் தலித் மக்களுக்கு சலூன்களில் முடிவெட்ட தொடர்ந்து மறுக்கப்பட்டது. இதனால், பதற்றம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததால், உள்ளூர் அதிகாரிகள் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுடன் சமாதானக் கூட்டங்களை நடத்தினர். பலமுறை எச்சரித்தும், முடிதிருத்தும் தொழிலாளர்கள் தலித் மக்களுக்கு சேவை செய்ய மறுத்து வந்தனர். இதனால், மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி கடைகளை மூட உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பல முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் கடைகளை மூடினர்.முடிதிருத்தும் தொழிலாளர்கள் தொடர்ந்து மறுத்து வந்ததால், கர்நாடக சமூக நலத்துறை சார்பில் தலித் மக்களுக்கு முடி திருத்தம் செய்ய அரசு சார்பில் தனி கடை திறக்கப்பட்டது.



Leave a Reply