தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் இன்று (அக்டோபர் 14) தொடங்கிய நிலையில், கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்காக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் முதல்நாளாக நடைபெற்ற கூட்டத்தில், இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேசமயம், கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், நாகலாந்து ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன், அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி மாதம் தொடங்கியதையடுத்து, பட்ஜெட் மற்றும் துறை வாரியான விவாதங்கள் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. அதன்பின் சுமார் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. இக்கூட்டம் அக்டோபர் 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.



Leave a Reply