கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் 10 பேர் பெண்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வில் 30க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிகழ்வுக்குப் பிந்தைய சூழ்நிலையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில், கரூரில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை காலை கரூருக்கு விரைகிறார். மேலும், இந்தச் சம்பவத்தை போர்க்கால அடிப்படையில் கையாள அமைச்சர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.



Leave a Reply