கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள் ஆஜர்

Spread the love

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக, த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மற்றும் மதியழகன் ஆகியோருக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, திங்கட்கிழமை (இன்று) மேற்கண்ட நால்வரும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தரப்பின் விளக்கங்களை அளித்தனர்.

இதே சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தும் பொருட்டு, கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோருக்கும் சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.