கரூர் மாவட்ட வேலுசாமிபுரத்தில் கடந்த பரப்புரை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதில் அரசியல் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் இருந்ததைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. நேற்று வீடியோ கால் மூலம் விஜய் மக்களுக்கு நலம் விசாரித்து, காவல்துறை அனுமதி வழங்கப்பட்ட பின்பு தங்களை சந்திக்க வருவதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



Leave a Reply