கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை என்ன செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்திய சென்னை மற்றும் தென் சென்னையில் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் அதன் பிறகு இரவு சென்னையில் தங்கி விட்டு நாளை மறுநாள் காலை, முதல் நிகழ்வாக வேலூர் சென்று அங்கு தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏசி சண்முகம் ஆகியோரை ஆதரித்து வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்றும் தெரிவித்தார்.
அதன் பிறகு நீலகிரி பாராளுமன்ற தொகுதி, கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு பிறகு தமிழக சுற்றி பயணத்தை முடித்துவிட்டு செல்வதாகவும் மீண்டும் வருகிற 12-ம் தேதி தமிழகத்தில் ஒரு சுற்றுப்பயணம் உள்ள நிலையில் அதற்கான தேதி முடிவு செய்த பிறகு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் காரில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது சம்பந்தமாக சதி வலையில் நயினார் நாகேந்திரன் பெயர் சொல்லப்படுவதாகவும் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவரே சொல்லிய பிறகு இதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் கூறியதுடன் இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் மீது தீர விசாரித்து எந்த நடவடிக்கை எடுத்தாலும் பிரச்சனை இல்லை என்று தனிப்பட்ட முறையிலும் கூறிய பிறகு எதிர்க்கட்சியினர் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர்.
ஒரு திருடனை போலீஸ் துரத்தும் பொழுது ஒரு வீட்டிற்குள் நுழைந்து மீண்டும் வெளியே வந்து போலீசை குழப்புவதற்காக திருடன் திருடன் என்று அந்த திருடனே கத்துவது போன்று திமுகவின் ஆர் எஸ் பாரதியின் கருத்து இருப்பதாகவும் கிராமப்புற சிறுவர்களை குறி வைத்து தாய் கிராமங்களில் கேலோ இந்தியா மைதானத்தை அமைக்க பாஜக வாக்குறுதி அளித்த நிலையில் கோவையில் சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அடிப்படையில் குழந்தைகள் விளையாடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக இருக்கும் சூழலில் கார்ப்பரேட்டுகளுக்கு ஊக்கமளிப்பதற்காக திமுக முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
இதே போல் முன்னாள் அமைச்சரான அதிமுக வின் உதயகுமாரின் கருத்து தொடர்பாக பேசிய அவர், ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு உதயகுமார் எங்கே இருக்கிறார் அந்த கட்சி எங்கு இருக்கப்போகிறது என்பது தெரியும் எனவும் ஒரு விளக்கு அணையும் போது பிரகாசமாக எரியும் என்பது போல அவரது கருத்து இருப்பதாகவும் கூறினார்.மேலும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பைத்தியக்கார மருத்துவமனைக்கு சென்று அவரது மூளையை பரிசோதிப்பதுடன் நல்ல மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் எனவும் உண்மையிலேயே சுய நினைவுடன் ஆரோக்கியமான கருத்துக்களை பேசுகிறாரா அல்லது ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக கட்சியை திமுகவிடம் விற்றுவிட்டு அதற்காக பேசுகிறார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Leave a Reply