,

கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

kamalhassan
Spread the love

இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தருமாறு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .