,

கமலஹாசனை மீண்டும் தோற்கடிப்போம் – பாஜக மாநில செயலாளர் பேட்டி

bjp
Spread the love
கமலஹாசன் கோவையில் போட்டியிட்டால் மீண்டும் தோற்கடிக்க தயாராக இருக்கிறோம் என  பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பேட்டியளித்தார்

பாஜக சார்பில் கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வேட்பாளர் கருத்து கேட்டு கூட்டம் அக்கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஜி.சூர்யா, “இந்த முறை அதிகமான தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர்.  தமிழகம் முழுவதும்
அந்தந்த மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இன்று மதியம் இரண்டு மணிக்குள் கருத்துக்களை சேகரித்து   தலைமையிடம் ஒப்படைக்க உள்ளோம்.

வாரிசு அரசியலும் ஊழலும் திமுகவிற்கு எப்பொழுதுமே களங்கமாக இருக்கக்கூடிய ஒரு விஷயம். தான் பிரதமர் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார். ஆளும் கட்சியை எதிர்த்து தான் அரசியல் என்ற அடிப்படையிலும் சித்தார்ந்த அடிப்படையிலும் தான் திமுகவை விமர்சிக்கிறோம்.  வரும் காலங்களில் வேறு யாரேனையும் விமர்சிக்க நேர்ந்தால் அவர்களையும் விமர்சிக்க தயாராக இருக்கிறோம்.

கோவை தொகுதி பாஜகவுக்கு மிக முக்கியமான தொகுதி.  கமலஹாசனை எதிர்த்து எங்களுடைய வேட்பாளர் தாமரை சின்னத்தில்  போட்டியிட்டு வெற்றியும் பெற்றார், கடந்த முறை கமலஹாசனை எப்படி தோற்கடித்தோமோ அதே போல் இந்த முறையும் அவர் இங்கு நின்றால் மீண்டும் அவரை தோற்கடிக்க பாஜக தயாராக உள்ளது” என்றார்.