கட்டுமானப் பொருட்களில் கூட கமிஷன் வாங்குகிறது திமுக எடப்பாடியார் குற்றச்சாட்டு

Spread the love

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் சிங்காநல்லூர் தொகுதியில் ரோடு ஷோ சென்ற இபிஎஸ்க்கு கும்ப மரியாதையுடன் பெண்கள் வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து ஜி.வி ரெசிடென்சி இணைப்புச் சாலையில் குழுமியிருந்த மக்களிடையே எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.
“கோவை என்றாலே தமிழ்நாட்டில் தொழில் நிறைந்த மாவட்டம். தென்னி ந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் இங்கு 3 ஷிப்ட்டும் தொழில் சிறப்பாக நடைபெற்றது. திமுக அவல ஆட்சியில் ஒரு ஷிப்ட் தான் நடக்கிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கெல் லாம் தீர்வு அதிமுக ஆட்சி அமைப்பதுதான். மீண்டும் தொழில் நிறைந்த மாவட்டமாக இதனை உருவாக்கிக்கொடுப்போம்.
சிங்காநல்லூரில் ரயில்வே மேம்பாலம் தொடங்கி பிருந்தாவன் நகர், ஏர்போர்ட் சாலை வழியாக அவிநாசி சாலை முடிய லிங்க் ரோடு போடுவதற்கு அதிமுக ஆட்சியில் நிலங்களை எல்லாம் எடுத்து திட்டம் தொடங்கியபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சியில் இந்த திட்டத்தை முடக்கிவிட்டனர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் மேம்பாலம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


எஸ்.ஐ.எச்.எஸ் காலனி எல்சி 6ல் மேம்பாலப் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது, திமுக திட்டமிட்டு திட்டத்தை விரைவுபடுத்தாமல் விட்டது, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைந்து முடிக்க ப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். திருச்சி சாலையை இணைக்கும் பணியை விமான நிலையத்துக்கு ஒப்படைத்துள்ளனர், அதை மாநில அரசே எடுத்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள், அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சி 52 மாத காலத்தில் கோவை மாநகரில், சிங்கையில் ஏதாவது பெரிய திட்டம் கொண்டு வந்தார்களா? நீங்கள் கேட்ட இடங்களில் எல்லாம் பாலம் கட்டிக்கொடுத்தோம், விமான நிலைய விரிவாக்கம் கூட அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது, திமுக ஆட்சியில் முடங்கிக் கிடக்கிறது, மீண்டும் அதிமுக ஆட்சியில் விரைந்து விரிவாக்கப் பணிகள் முடித்துக்கொடுக்கப்படும்.


பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டப் பணிகள் கொண்டுவரப்பட்டதும் அதிமுக ஆட்சியில்தான்.
தமிழ்நாட்டிலேயே நீளமான ஒரே பாலம் 10 கிலோமீட்டர், அவிநாசி சாலையில் இருந்து உப்புளிபாளையம் வரை உயர்மட்டப் பாலம், அதிமுக ஆட்சியில் கொடுத்தோம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 1950 கோடியில் இத்திட்டத்தைக் கொடுத்தோம்.
இது சாதாரண திட்டமில்லை, இன்னும் 10 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் வரப்பிரசாதமாக இருக்கும். சாலையை விரிவாக்கம் செய்யமுடியாது, அதனால் திட்டமிட்டு கண்டறிந்து அதற்கேற்றவாறு உயர்மட்டப் பாலம் அமைத்தோம்.
திருச்சி சாலையில் ராமநாதபுரம் சுங்கம் இடையே 250 கோடியில் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் அமைத்ததும் அதிமுக அரசுதான். ஆவராம்பாளையத்தில் இருந்து கணபதி செல்லும் சாலை 57 கோடியில் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கீழ் எல்காட் அருகே 114 கோடியில் 2 லட்சம் சதுரடியில் ஒரே நேரத்தில் 17 ஆயிரம் பேர் அமர்ந்து பணியாற்றும் வகையில் ஐடி பார்க் கட்டும் பணி தொடங்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில்தான். சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவக் கல்லூரியும் அதிமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது.
சிங்காநல்லூர் மக்களின் குறை தீர்க்கும் வகையில் வாட்ஸ்ஆப் எண் வழங்கி, அதில் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்ட தொகுதி இது.
அதிமுக 10 ஆண்டுகாலத்தில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார்,
அதனால்தான் இதனை சொல்கிறேன். இந்த ஒரு தொகுதியிலே இவ்வளவு கொடுத்தோம். கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் இல்லை, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் திமுக அரசின் சாதனை. நாம் கட்டிய பாலம், அதனை திறந்துவைத்து ஸ்டாலின் போகிறார், சிறப்பாக கட்டப்ப ட்டிருப்பதாகச் சொல்கிறார். அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கும், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் என்றால், அது ஆற்றில் அடித்துச்சென்றுவிடும். தென்பெண்ணை ஆற்றில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதத்திலேயே வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடந்தது. இன்று சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். திமுக ஆட்சி அமைத்து ஒரே ஆண்டில் கஞ்சா அதிகரித்துவிட்டது என்று முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்றோம். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் எங்கே பார்த்தாலும் போதை நடமாட்டம்.
இன்று காலை கூட தொழிலதிபர்கள் கலந்து ரையாடல் நடைபெற்றது. அப்போது என்னிடம் ஒருவர் சொன்னார். ரோட்டில் நடந்துசெல்லும்போது யார் வந்து வெட்டுவார்கள் என்று தெரியாத அளவுக்கு மோசமான நிலை என்றார். அதற்குக் காரணம் போதை. திமுக போதையைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது, போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது சொல்கிறார். நாங்கள் சொல்லும்போதே நடவடிகை எடுத்திருந்தால் போதையிலிருந்து காப்பாற்றி இருக்கலாம், எல்லாம் சீரழிந்த பின்னர் சொல்கிறார்.
திமுக ஆட்சியில் 6 மாதத்தில் 6 காவலர்கள் கொல்லப்பட்டனர். மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது.? திமுக ஆட்சி இருக்கின்ற வரை மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம். கொங்கு மண்டலத்தில் முதி யோர்களை கொலை செய்து கொள்ளையடிக்கிறார்கள். இது தொடர்கதையாகிவிட்டது, இந்த அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தபின்னர் இதற்கு முடிவு கட்டப்படும்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். சொத்து வரி உயர்த்தப்படாது என்றனர், அதன்படி நடக்கவில்லை. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 6% உயர்த்தப்படும். மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 5% உயர்வு. தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். கடுமையாக தொழில் பாதிப்பதாக காலையில் நடந்த கூட்டத்தில் தொழில் முனைவோர் சொன்னார்கள், இங்கிருக்கும் நிறுவனங்கள் எல்லாம் வேறு மாநிலத்துக்கு செல்கிறது. அதனால் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொழிலதிபர்கள் தாக்குப்பிடிக்கும் அளவுக்குத்தான் வரி உயர்வு இருக்க வேண்டும்.
இந்த ஆட்சியாளர்களுக்கு எதைப்பற்றியும் கவலை யில்லை, அவரது குடும்பத்தை பற்றித்தான் கவலை. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. முதலாளி என்றால், அவருக்குப்பின் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வருவார்கள், அதுபோல தான் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி இன்பநிதி வரை வருகிறார்கள். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட எம்.எல்.ஏ., எம்பி., முதல்வர் ஆகலாம்.
இது ஜனநாயகமுள்ள கட்சி. கொரோனா காலத்தில் விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம்,
தொழிலாளர்களுக்கு தேவையான நிதி கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். அதேயாண்டு தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம்.
மக்கள் துன்பப்படும் போதெல்லாம் காப்பாற்றிய அரசு அதிமுக அரசு. மீண்டும் அதிமுக அரசு மலரும், உங்களது தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
அதிமுக ஆட்சியில் மாநகராட்சி பகுதியில் வீடு, கடை கட்ட ஆயிரம் சதுரடிக்கு பிளான் அப்ரூவல் வாங்க கழிவுநீர் கட்டமைப்பு டெபாசிட் உள்பட 37800 ரூபாய்தான். அதுவே திமுக ஆட்சியில் 88 ஆயிரம் ரூபாய், கழிவுநீர் கட்டமைப்பு டெபாசிட் 20 ஆயிரம், மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். திமுக அதிமுக ஆட்சியை ஒப்பிட்டுப்பார்த்தால் 71 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.
கட்டுமானப் பொருட்கள் விலையும் எகிறிவிட்டது. ஒரு யூனிட் எம்.சாண்ட் அதிமுக ஆட்சியில் 2500 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 5500 ரூபாய்க்கு விற்கிறது, ஒரு யூனிட் ஜல்லி அதிமுக ஆட்சியில் 2000 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 4500 ரூபாய்க்கு விற்கிறது, ஒரு டன் கம்பி அதிமுக ஆட்சியில் 40 ஆயிரம் ரூபாய், திமுக ஆட்சியில் 70 ஆயிரம் ரூபாய்,
ஒரு செங்கல் அதிமுக ஆட்சியில் 6 ரூபாய்க்கு விற்றது, திமுக ஆட்சியில் 10 முதல் 12 ரூபாய்க்கு விற்கிறது, சிமெண்ட் அதிமுக ஆட்சியில் வெளிமார்க்கெட்டில் 240 ரூபாய், திமுக ஆட்சியில் வெளி மார்க்கெட்டில் ஒரு மூட்டை 350 ரூபாய், மரம் 200% உயர்ந்துவிட்டது. இனி ஏழை மக்கள் வீடுகட்டவே முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.
இரவில் கனவில் வேண்டு மானால் வீடுகட்டலாம்.
கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அது அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நானும் சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டேன், எந்த நடவடிக்கையும் இல்லை. எல்லாவற்றிலும் கமிஷன் வருவதால் இதைப்பற்றி கவலைப்படவில்லை.
ஒரே ஐந்தாண்டில் இவ்வளவு விலை உயர்த்துவிட்டது.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
தமிழகத்தில் சரியான முறையில் ஏழைகளுக்கு பரிசோதனை செய்யாததால் பல பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். நாளுக்கு நாள் பரவுகிறது. இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. அதிமுக ஆட்சியில் 15 லட்சம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. நோய் இருந்தால் உடனுக்குடன் மருத்துவமனைக்கு அனுப்பி குணப்படுத்தினோம்.
புற்றுநோயில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்பதற்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை, ராயப்பேட்டை, தூத்து க்குடி, சேலம், மதுரை மருத்துவமனைகளில் சுமார் ஒவ்வொரு மருத்துவம னைகளிலும் 22 கோடியில் லீனியர் ஆக்கிலரேட்டர் புற்றுநோய் கண்டறியும் கருவியை நிறுவி சிகிச்சை அளித்தோம். அதிமுக ஆட்சியில் கோவையில்கூட 200 கோடி ரூபாயில் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்துள்ளோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் சிகிச்சை பெற்றுவந்த தனது தந்தையை மகன் தரதரவென்று இழுத்து க்கொண்டு சென்ற காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தீர்கள். ஒரு வீல்சேர் கூட மருத்துவமனையில் வைக்கவில்லை.
இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவத் துறையில் அதிமுக சிறந்துவிளங்கியது.
இரண்டு கைகள் இல்லாத ஒருவருக்கு இறந்தவரின் உடலில் இருந்து கைகளைப் பொருத்தினோம். இன்று திருமணம் முடிந்து நலமோடு இருக்கிறார், என்னை சந்தித்து கைகுலுக்கினார். இரண்டு கையும் இல்லாத ஒருவருக்கு இரண்டு கை வழங்கி சாதனை படைத்தோம். அந்தளவுக்கு அதிமுக சிறந்துவிளங்கியது, இதுவே திமுக ஆட்சியில் கால்பந்து வீராங்கனை உயிரோடு போய் இறந்துவந்தார். சாதனை மேல் சாதனை படைத்த அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்திட வாக்களியுங்கள்.
ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந் தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும்.
” என்று பேசினார்.
இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உடனிருந்தனர்.