,

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்: மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Spread the love

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்த மூன்றாம் தேதி கோவை சைபர் போலீசார் கைது செய்தனர். சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சவுக்கு  சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கஞ்சா வைத்திருந்ததாக கைதான வழக்கில் மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை கோரிக்கை வைத்த நிலையில் 2 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.