கோவையில் ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு என்பதை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றது.கோவை சிவானந்தா காலனி பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
இந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் ஒரு 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை படுகொலை செய்து இருக்கிறார்கள் இந்தியாவின் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அதனால் இந்த கட்சிகள் எல்லாம் உண்மையிலேயே ஜனநாயகத்தை காப்பாற்றுவார் என்றால் இந்த மாபெரும் அரசியல் கட்சித் தலைவர்கள் உண்மையிலேயே ஜனநாயகத்தை காப்பாற்றுவார் என்றால் இந்த மாபெரும் கட்சித் தலைவர்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தலைவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் இந்த நாட்டின் ஜனநாயக தலைவராக அவர்கள் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் எங்களுடைய கோரிக்கை நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களை கோயம்புத்தூருக்கு வர இருக்கிறார் கோயம்புத்தூரில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் ஓட்டுக்கு பணம் கொடுக்காது என்று அறிவிக்க வேண்டும் அதைப்போல அனைத்து கட்சிகளும் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எங்கள் கட்சி ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும் அதேபோல பாரத கட்சி ஜனநாயக கட்சி இவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று அறிவிக்க வேண்டும் எங்களுடைய கோரிக்கை என்றார்.
ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு என்பதை வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்உண்ணாவிரதம்

Leave a Reply